2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல் இருக்கத் தீர்மானித்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஜனவரி மாதத்திலும் பழைய விலையிலேயே எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும்.
தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகள்:
சிலிண்டர் வகை விலை (ரூபா)
12.5 கிலோ கிராம் ரூ. 3,690.0
05 கிலோ கிராம் ரூ. 1,482.0
02.3 கிலோ கிராம் ரூ. 694.00
