ஹரிணி அமரசூரிய பதவி விலகாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும்: மொட்டுக் கட்சி எச்சரிக்கை

கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்து வரும் ஹரிணி அமரசூரிய உடனடியாகக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகாவிடின், நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஒரே நபர் பிரதமர் பதவியையும் கல்வி அமைச்சர் பதவியையும் ஒரே நேரத்தில் வகிப்பது அரசியல் நெறிமுறைகளுக்கும் நிர்வாக ஒழுங்குக்கும் முரணானது.

குறிப்பாக, கல்வித்துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதற்கான முழுக் கவனமும் பொறுப்பும் அவசியமாகும்.

கல்வி துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆசிரியர் நியமனங்கள், பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்கள் மற்றும் மாணவர்களைப் பாதிக்கும் கொள்கை முடிவுகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி வருகின்றது.

இந்த நிலை தொடருமானால், மக்கள் தங்களது அதிருப்தியை வீதியில் வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அரசு மக்களின் குரலைக் கேட்காவிட்டால், மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போவார்கள். அதற்கான முழுப் பொறுப்பும் அரசின் மீதே இருக்கும்.

கல்வி அமைச்சுப் பொறுப்பை முழுமையாகக் கவனிக்கக்கூடிய தனி அமைச்சரை நியமிப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்