அரசியல் கைதிகளின் விடுதலை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிப்போரின், தண்டனையை தளர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான பரிசீலனைக்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அதன்படி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 வருடங்களுக்கு மேலாக தண்டனையை அனுபவிப்போர் தொடர்பில் குறித்தக் குழு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் வகையிலேயே இந்த விடயங்கள் ஆராயப்படுவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 10 பேர் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.

இவர்களின் தண்டனைகளை ஆராய்ந்து, விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது செய்தி சேவை, நீதி அமைச்சரிடம் வினவியது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமே கைதுகள் இடம்பெற்றுள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.

அத்துடன், எவரேனும் தனிநபர்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தம்மிடம் சமர்பிக்குமாறும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!