தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியத்தை வழங்குவதற்காக, ஜனாதிபதி 2026 வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை ரூ. 1,550 ஆக உயர்த்தவும், தினசரி வருகை ஊக்கத்தொகையாக ரூ. 200 வழங்கவும் முன்மொழிந்தார்.

இந்த திட்டங்களை செயல்படுத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆறு மாதங்களுக்கு தோட்ட நிறுவனங்கள் மூலம் தொடர்புடைய ஊக்கத்தொகையை செலுத்தவும், அதன் பின்னர் அதை நேரடியாக தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த முறையின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை செலுத்த தொழிலாளர் அமைச்சரும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சரும் சமர்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ranil
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
accident
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து
anura-julie chung
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
jaffna death
யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
arrest
பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது
kilinochchi
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து 04 பேர் பலி!