கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, ஜனவரி மாதத்தின் இறுதி நாளான இன்று (31) எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 349,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
