தொலைபேசி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் தந்தை தனது மகளை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (30) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியாவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த சிறுமிக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட இந்தத் தர்க்கத்தின் போது, தந்தை கத்தியால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சந்தேகநபரான தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மங்ஹந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
