கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் கைது !

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று ( 6) கைது செய்யப்பட்டுள்ளார்.

300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

,இதேவேளை, கடந்த ஆண்டு 16 வங்கிக் கணக்குகளில் ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான வைப்புத்தொகையை சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஏற்கனவே கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் ஏனைய மகள்கள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மூத்த மகளும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்