இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி, 2026 ஜனவரி மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டு பிரதான துறைகளுமே நேர்மறையான வளர்ச்சையைப் பதிவு செய்துள்ளன.

இதன்படி, நாட்டின் உற்பத்தித் துறை 56.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

மேலும், சேவைத் துறை 64.5 புள்ளிகள் என்ற உயர் மட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியின் வேகம் சற்று மந்தமடைந்திருந்தாலும், அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலை வரம்பிற்கு (50.0) மேலேயே காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, புதிய கொள்வனவு கட்டளைகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளன. அத்துடன், பொருட்களின் கையிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு மட்டங்கள் சீராக உள்ளன.

இந்தத் தரவுகள் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைப் பொருளாதாரம் ஒரு நிலையான முன்னேற்றப் பாதையில் இருப்பதைக் காட்டுகின்றன.

இந்த நிலையில், 50 புள்ளிகளுக்கு மேல் சுட்டெண் அமைந்திருப்பது அந்தந்தத் துறைகளின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்