சிங்கள மொழியில் கலந்துரையாடல்: சீற்றமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (26) அன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்ட நேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்கள மொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ் மொழி மூலமான மொழிபெயர்ப்பையும் அவர் கோரியதையடுத்து குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ் மொழி மூலமான மொழிபெயர்ப்புக்களுடன் சீராக கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!