மின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அம்பாறை  உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள்  வீதியை  விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில்    மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்  உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (25) மதியம்  இடம்பெற்றுள்ளதுடன்  குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு  வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும், 22 வயதுடைய  ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என்ற இராணுவ வீரர் ஆவார்.

குறித்த இராணுவ  வீரர் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர்  மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை  பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட   பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் உஹன பிரிவுக்குப் பொறுப்பானவிற்கான  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  டி.எம். திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ்  உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!