ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 89 சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள்!

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி இதுவரையில் 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்ட 29 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திட்டமிடப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டில் இத்தகைய சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றவாளியான பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க பலப்பட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் தடுப்புகாவல் உத்தரவு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!