விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! மீட்கப்பட்டோர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து சுமார் 30 பேர் இதுவரை இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது கடற்படையினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (04) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்,

ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா” என்ற கப்பலில் சுமார் 180 பணியாட்கள் இருந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் இருக்க வில்லை. கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கு வந்த அனர்த்த அழைப்பின் அடிப்படையில், மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் விசேட மீட்புப் படகுகள் மற்றும் உலங்குவானூர்திகள் இந்த நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!