யாழ் நோக்கி படையெடுக்கும் தென்பகுதி கண் நோயாளர்கள்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் நோயியல் பிரிவுக்கு, தென் பகுதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் பகுதியிலிருந்து, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு, கண்நோய் தொடர்பில் சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளர்களால், ஜனாதிபதிக்கு இந்த விடயம் தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கண் வெண்திறை நீக்கத்துக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், இதற்கான சத்திரசிகிச்சைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும், யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு, கண் சிகிச்சைகளுக்காக பெருமளவானோர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் நோயியல் விசேட நிபுணர் எஸ்.மலரவன் தலைமையிலான மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள், தங்களுக்கான சிகிச்சைகளை உரியவாறு வழங்குவதாகவும், தென்பகுதி நோயாளர்கள் கூறியுள்ளனர்.

தென் பகுதியில் அதிக செலவில் கண் நோய் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படுகின்ற போதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முற்றுமுழுதாக இலவச சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் நோய் சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான மேலதிக வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!