எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் – அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் விலை எதனால் உயர்த்தப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

உள்நாட்டு பொருளாதார நிலைமைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது உலக சந்தை நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து செலவுகளும் பொருட்களை போக்குவரத்து செய்யும் செலவுகளும் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ள அவர் சேவைகளின் விலைகளும் உயரக்கூடிய நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மக்களுக்கு ஓரளவு அழுத்தத்தை எதிர் நோக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன்கள், பேருந்துகள் மற்றும் தொடருந்து உள்ளிட்ட ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிப்பதற்கு குறித்த சங்கங்கள் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயரக்கூடிய நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறு எனிம் இவ்வாறான ஒரு நிலைமையின் கீழும் இந்த நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் தற்போது நிலவி வரும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளும் இதே நிலைமையை இதில் நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் விலை சுமார் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பங்களாதேஷில் எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பதற்கு அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது போதியளவு எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும் எதிர்வரும் சில மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் ஏற்கனவே கொள்வனவு செய்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிலைமைகளில் எரிபொருள் விநியோகம் தடைபடுவதனை தடுப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் எரிபொருளுக்கான விலைகள் உயர்த்தப்பட்டமைக்கான காரணம் அடுத்த எரிபொருள் இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய அதிக அதிக விலைகளை ஈடு செய்யும் நோக்கிலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை அரசாங்கம் தற்காலிகமானது என கருதுவதாகவும், இந்த உலக நெருக்கடி நிலைமையின் போது மக்கள் சிக்கனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் போதிய அளவு விநியோகங்களை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் தேவையற்ற பீதி அடைய தேவை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாஜித் இந்திக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
பலாலி விமான நிலைய விரிவாக்கம்: "காணிகளை இழக்க முடியாது" – எம்.பி சிறீதரனிடம் மயிலிட்டி மக்கள் திட்டவட்டம்
no smoking
2010க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய நிரந்தரத் தடை? – புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை!
police
திருகோணமலையில் வீடியோ ஆதாரத்தால் சிக்கிய பொலிஸ்: பணி இடைநீக்கம்!
srilanka
சுட்டெரிக்கும் வெயில்: சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!
londan
பணம் மற்றும் நகைகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்: லண்டன் வாழ் தமிழர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!
bike accident
மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற போது சோகம்: விபத்தில் கணவரும் மைத்துனரும் உயிரிழப்பு!