அரிசி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசாங்கத்திடம் போதுமான அரிசி கையிருப்பில் இருப்பதால், பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்காது என்று கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் கோசல வில்பவா இதனை தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மரதகஹமுல கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களை பார்வையிட்டபோதே, இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நெல் மூட்டையோ அல்லது அரிசி மூட்டையோ கூட சேமிக்கப்படாமல் இருந்த களஞ்சியம் தற்போது அரிசியால் நிரம்பியிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

மேலும், சுமார் 75,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறன் கொண்ட இரண்டு களஞ்சியங்கள் நீண்டகாலமாக சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டிருந்தது தேசிய இழப்பாகும்.

தனது அரசின் கீழ் அந்த களஞ்சியங்களுக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!