பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கியமாக நான் இந்த சாணக்கியன் எம்பிக்கு (MP) சொல்ல வேண்டும். இன்று வடக்கை எடுத்துக்கொண்டால், சாணக்கியன் எம்பி பற்றியும், அவருக்குப் பிறகு அவரது குருவான சுமந்திரனுக்கு எதிராகவும் அதிகமாகப் பேசுவது நான்தான்.

அந்தத் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். அப்படி குற்றச்சாட்டுகள் இருந்தால் தயவுசெய்து அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள், இல்லையென்றால் சி.ஐ.டி-யிடம் (CID) சென்று ஒப்படையுங்கள். ஒப்படைத்துவிட்டு அந்த வேலையைச் செய்யுங்கள்.

நான் கையூட்டுப் பெற்றேனா இல்லையா என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால், உங்களுக்கு எதிராக இப்போது இந்த நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் பேசுவது நான் மட்டும்தானே. எனவே, அந்தத் கோபத்தை வைத்துக்கொண்டு இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். தயவுசெய்து அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்