வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!

வவுனியா பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பெரியார்குளம் பகுதியில் 25 வயதான குறித்த இளைஞரை வழிமறித்த எட்டுபேர் கொண்ட குழு அவர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடுசென்றுள்ளார்.

குறித்த தாக்குதலினால் அவரது கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!