கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாத்தளை, கலுதேவள, ரத்தோட்ட வீதியில் வசித்து வந்த திருமணமாகாதவரான (52) வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று (21ஆம் திகதி) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில், இந்திய நாடாளுமன்றத்தை சித்தரிக்கும் படப்பிடிப்பை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா மற்றும் பல இந்திய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருகை தந்துள்ளனர்.

இதன்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேடமிட்டுத் தயாராகிக் கொண்டிருந்த நபர் கழிவறைக்குச் செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்த அவரை உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!