தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களித்தவர் கைது!

திருப்பத்தூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை தொலைப்பேசியில் காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (22) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

வாக்குசெலுத்திவிட்டு கை விரலில் மை வைத்ததை வாலிபர்கள், இளம்பெண்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை இணையதளத்தில் வெளியிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள் அவர் காணாளி எடுப்பதை சிசிடிவி மூலம் அதிகாரிகள் உறுதி செய்ததை அடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்