யாழ். நாகர்கோவில் – நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறிய இராணுவம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து, இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளுமின்றி திடீரென நேற்று (27) வெளியேறியுள்ளனர்.

இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நீண்ட காலத்தின் பின்னர் அப்பகுதிக்குச் சென்ற பக்தர்கள் தற்போது ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவத்தினர், அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகால ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தாலும், ஆலய வளாகத்திலிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்