சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரை வழக்கு: விசாரணைகள் முடிவுக்கு வந்தன

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி அதன் விகாராதிபதி தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான விசாரணை இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது.

குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலையின் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது முன்னிலையான அரச சட்டத்தரணி, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதிப் பத்திரத்திற்கு இணங்க, குறித்த கட்டிடத்தின் சட்டவிரோதக் கட்டுமானங்களை மனுதாரரான தேரர் அகற்றியுள்ளதால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே, எதிர்மனுதாரர் தரப்பின் இந்த அறிவிப்புத் தொடர்பில் திருப்தியடைவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைய, மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!