யாழில் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றுள்ளது.
தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
