நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு: விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்

நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு காவல்துறை குழுக்களும் இரண்டு பிரதம காவல் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன.

ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.

அவர் பணியில் இருந்தபோது ஒரு முறையும், இடைநிறுத்தப்பட்டிருந்தபோது இரண்டு முறையும் வாக்குமூலங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்