குற்றவாளிக்கு பதவி வழங்கிய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்!

யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் காரைநகர் பகுதி வீதியால் தலைக்கவசம் இன்றி சென்றுள்ளார். இதன்போது அவரை வழிமறித்த ஊர்காவற்துறை பொலிஸார் அவர் மதுபோதையில் இருப்பதாக சந்தேகித்தனர்.

அதன்பின்னர் அவரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் மதுபானம் பாவித்தமை உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.

அதன்பின்னர் அவரது வழக்கு கடந்த 20ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், சாரதி அனுமதிப் பத்திரமானது மூன்று மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் பின்னர் அதே நபர் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் உப தலைவராகவும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மதுபானம் பாவித்துவிட்டு வீதியில் விழுந்து கிடந்த இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த, பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்