தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இருப்பினும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற அயராத நம்பிக்கையில் இருந்த தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைய உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜயை எதிர்க்க உதயநிதி சரியான ஆளாக இருப்பார் என தி.மு.க. தலைமை கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்