வித்யா வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதி முடிவு வெளியானது!

நாட்டை உலுக்கிய புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06.05.2026) உறுதி செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் நாட்டில் பாரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களுக்கு, முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.

இந்தநிலையில், தங்களை விடுவிக்கக் கோரி குற்றவாளிகள் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, பிரதம நீதிபதி பத்மன சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை விசாரணை செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து இன்று தீர்மானத்தை அறிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!