செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் காரியாலத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

29.05.2026.வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஸ்குமார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த 21ம் திகதி டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநரை பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் வைத்து வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்போது செய்தி சேகரிப்பதற்கு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை மற்றும் ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து பதிவு செய்திருந்த வீடியோக்களை அழித்தமை, ஊடகவியலாரின் தனிப்பட்ட வட்ஸப் மெசேஜ்களை பரிசோதித்தமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை ஊடாக ஊடகவியலாளரின் மனித உரிமைகளை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி