மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!

கண்டியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பௌத்த பிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியினது தந்தையின் சகோதரர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

25 வயதுடைய இந்த பிக்கு பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், மறுநாள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்ணை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை முக்கிய பொறுப்பில் இருந்த பௌத்த துறவி ஒருவர் பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றுமொரு பிக்குவின் மோசமான செயல் அம்பலமாகி உள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!