ஓமந்தையில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்ற கும்பல்: தட்டிக் கேட்ட தாய் மீது தாக்குதல்; மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி!

ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக் கேட்ட தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (06.06) இரவு இடம்பெற்ற சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த தாயார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஓமந்தை, நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பரே மரணமடைந்தவராவார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

accident
மன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து: நால்வர் காயம்
gun shoot
கல்கிஸ்சையில் துப்பாக்கி இயங்காததால் நூலிழையில் உயிர்தப்பிய நபர்!
Ravindra Wijegunaratne
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுதலை!
jaffna
சமகால அரசியல் மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாடல்
chemmani protest
செம்மணி புதைகுழியை பார்வையிட வந்த ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு!
suresh saleh
சுரேஷ் சலேவின் ரிட் மனு: மேலதிக பரிசீலனை ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு!