உயிர்த்த ஞாயிறு விசாரணை: சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவை கைது செய்ய தற்போதைக்குத் தீர்மானமில்லை!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ இந்த கட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நியாயமான காரணங்களின்றி தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, வருண ஜயசுந்தரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு இந்த விபரத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!