சலே விவகாரம்: திருத்தந்தை லியோவுக்கு சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் கடிதம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கியுள்ள மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது குடும்ப உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதற்கமைய, இலங்கைக்கான திருத்தந்தையின் தூதுவரான ஆயரிடம் இக்கடிதத்தைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று காலை எடுக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

அதன் பின்னர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்

அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் நிறைவடைகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேவின் குடும்ப உறவினர்கள் திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சலேவின் விவகாரம் தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சில பாதிரியார்கள் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்துக்களை வெளியிட்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்