தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை குற்றவாளிகள்: தனுஷ்கோடியில் மரைன் பொலிஸ் அதிரடி!

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன் பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(24.07.2026) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் – மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்று பார்த்த போது இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த மரைன் பொலிசார் இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை – வட்டாலை பகுதியைச் சேர்ந்த லூசிநந்த்(30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(31) ஆகியோர் என மரைன் பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் நேற்று(23) இரவு மன்னார் – பேசாலை கடற்கரையில் இருந்து 3 இலட்ச ரூபா பணம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு இன்று(24) அதிகாலை சுமார் 4 மணி அளவில் தனுஷ்கோடி – கம்பிப்பாடு கடற்கரையில் வந்து இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும் போதைப் பொருள் கடத்தல் வழக்கு மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல நிலுவையில் உள்ளதுடன், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்ட விரோதமாக மறைந்திருக்கலாம் என்பதற்காக வந்திருக்கலாம் என தெரிய வந்தன் அடிப்படையில் தொடர்ந்து இவர்களிடம் மத்திய மாநில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக தமிழகத்திற்கு நுழைந்ததன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன் இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கை நிலுவையில் உள்ளதால் இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!