கோட்டை நீதவான் நீதிமன்றில் எம்.பி. அர்ச்சுனா முன்னிலை: பிடியாணை உத்தரவு நீக்கப்பட்டு பிணை அனுமதி!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். 

இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிணை வழங்கப்பட்டது. 

அவருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், கடந்த 24ஆம் திகதி அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் ஆஜராகாதிருந்த நிலையிலும், அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. 

இதனடிப்படையில், கோட்டை நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!