ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயது மாணவி!

ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்திற்கு இலங்கை மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வியை தேசிய அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, தற்போது 200 இலங்கை மாணவர்கள் STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிர பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தெரிவுச் செயல்பாட்டின் அடிப்படையில், 18 வயதான செனீசாகுணவர்தன என்ற மாணவி, மதிப்புமிக்க ShakthiSAT International Mission சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் 2026 ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதுடன், இதற்கான பயண ஏற்பாடுகள் ஆகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன.

இப்பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோர் கலந்துகொள்ளும் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் அரச நிகழ்வுகளில் பிரதிநிதியாகச் செனீசா மாணவி பங்கேற்கவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!