‘பிள்ளையான்’ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( ‘பிள்ளையன்’) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு முன்னர் இந்த வழக்கு 2025.10.31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

அன்றைய வழக்கில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த மனு ஜனவரி 19, 2027 அன்று விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!