மாத்தளையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில் சோகம்: மண்சரிவில் சிக்கித் தாய், மகள்கள், பேரன் உயிரிழப்பு!

இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹற்றன், கினிகத்தென – பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் அதில் புதையுண்டு நான்கு பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் மாத்தளையில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என்றும், ஏனைய இருவரும் வீட்டில் வசித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய் குசும் ரத்நாயக்க, மூத்த சகோதரி ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, இளைய சகோதரி மனேல் குமுதுனி ரத்நாயக்க, மகன் மஹின்ச தினேத் ரத்நாயக்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!