யூடியூப்பில் அதிரடி மாற்றம்: பணமீட்டல் தகுதி வரம்புகளை உயர்த்தியது நிறுவனம்!

யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றங்கள் கிரியேட்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் கூட்டாளர் திட்டமான YouTube Partner Program (YPP)-இல் இணைந்து பணமீட்டுவதற்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யூடியூப் மூலம் விளம்பர வருவாய் உள்ளிட்ட பணமீட்டும் வசதிகளைப் பெற விரும்பும் சேனல்கள் இனி பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்தொடர்பவர்கள்: குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களை கொண்டிருக்க வேண்டும்.

பார்வை நேரம்: கடந்த 12 மாதங்களில் பதிவேற்றப்பட்ட நீண்ட வடிவிலான காணொளிகளுக்குக் கிடைத்த மொத்த பார்வை நேரம் 4,000 மணிநேரத்திலிருந்து 8,000 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

YouTube Shorts: Shorts மூலம் தகுதி பெற விரும்பும் சேனல்கள், கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் என்ற வரம்புக்கு பதிலாக 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த புதிய தகுதி வரம்புகள் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், YouTube Partner Program-இல் இணைந்து பணம் ஈட்ட விரும்பும் புதிய மற்றும் வளர்ந்து வரும் உள்ளடக்க உருவாக்குநர்கள், முன்பைவிட அதிகமான பார்வை நேரம் அல்லது Shorts பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை