உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலேவிடம் மயக்க நிலையில் மருத்துவ ஆய்வு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை மயக்கத்தில் வைத்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

அங்கு வருகை தந்த மருத்துவக் குழுவினர் முற்பகல் 9.00 மணிமுதல் மாலை வரை அவரைப் பரிசோதித்ததாக தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய மருத்துவக் குழுவினரே இவ்வாறு பரிசோதனை செய்துள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் வாரம் சலேயின் குடும்ப உறவினர்களைச் சந்திப்பதற்கும் மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிரேஷ்ட நிபுணத்துவ நீதவான் மனநல மருத்துவர் சுசித் மெண்டிஸின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிபுணத்துவ மருத்துவர் சித்தாஹரி அபயநாயக்க, நிபுணத்துவ மருத்துவர் தசந்தி அக்மீமன, நிபுணத்துவ மருத்துவர் துலைக்கா அமரசிங்க வாஸ், நிபுணத்துவ மருத்துவர் வஜிர தர்மவர்தன ஆகியோர் செயற்படுகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை