வரி செலுத்துவோர் கவனத்திற்கு! தவறினால் அபராதம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.

இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

காசோலைகள், வங்கி வரைவோலைகள் அல்லது கட்டளைப் பத்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்கள் உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அவை தாமதமானதாகவே கருதப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முற்பண வரியை (Withholding Tax) ஓகஸ்ட் 15, 2026 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் வரி செலுத்துவோரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை ஆகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை