மைத்திரிக்கு பல கோடிகள் கொடுத்து அமைப்பாளர் பதவி பெறப்பட்டதா? – வெளிவரும் பயங்கர பின்னணி

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல திடுக்கிடும் மற்றும் பயங்கர தகவல்கள் வெளிவருகின்றன.

அந்த வகையில் அவரின் மகன் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பிலும் அவர் பல அரசியல் கட்சிகள் விகாரைகளுக்கு பணம் வழங்கிமையும் தெரியவந்துள்ளது.

ஷிரான் பாசிக்கின் மகனான நதீம் பாசிக் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தெஹிவளை தொகுதி அமைப்பாளர் பதவியை பல கோடிகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி பெற்றுக் கொண்டுள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள்

அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் தெஹிவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே தனது பணிகளைச் செய்துள்ளார். அப்போது பல விகாரைகளுக்கு பண உதவி செய்துள்ளார்.

ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் இவரின் பெரும் தொகை பணம் ஒரு தேரரிடம் இருப்பதாக தகவல் உலாவியது. வெள்ளவத்தை ஹக்மன நந்தாலோக தேரரின் பெயரே அடிப்பட்டது.

ஹரக் கட்டாவின் பணம் தொடர்பிலும் இந்த தேரரே தொடர்புபட்டார் என நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். ஆனால் இன்றுவரை யாரும் பதிலளிக்கவில்லை.

எனவே, அந்த தேரரின் பெயர் இங்கேயும் அடிப்பட்டது. ஆனால் எவ்வித விசாரணைகளும் நடக்கவில்லை. இலங்கையில் உள்ள ஒரு மரணச் சடங்கு உதவிச் சங்கம் கூட வருமானம் எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு செலவிடப்பட்டது என்பதில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

ஆனால், பில்லியன் கணக்கில் பணம் வரும் ஓர் அரசியல் கட்சி, எங்கிருந்து பணம் வந்தது, எதற்குச் செலவிடப்பட்டது என்பதைப் பகிரங்கப்படுத்துவதில்லையே மக்களும் அதைத் கேட்பதில்லை.

எனவே, இந்த அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு வழிகளில் பணம் வருகிறது. உளவு அமைப்புகள், போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலகக் குழுக்களிடமிருந்து பெரும் தொகை வருகிறது ஆனால் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை.

எனவே, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரை இலங்கைக்குக் கொண்டு வந்த உடனேயே விசாரணையை மேற்கொள்வது பொலிஸார்.

பொலிஸிலும் பழைய முறைகேடுகள் ஏதோவொரு வழியில் நடக்கக்கூடும். ஏனென்றால், நான் எப்போதும் கூறுவது போல, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கி புதிய அரசியல்வாதிகளை உருவாக்கியிருந்தாலும், 18 இலட்சம் அரச ஊழியர்களைப் புதிதாகக் கொண்டுவர முடியாதே. அதனால் இவ்வாறான மோசடிகளை எமக்கு உடன் நிறுத்த முடியாது என குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!