ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது: உயர் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இன்று (10.09.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை அடுத்து, ஞானசார தேரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிலைநிறுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!