நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது முற்றிலும் அநியாயமானது எனவும், அதுவொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுகளுடன் செயற்படுவதாகவும், இதன் ஒரு கட்டமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இடம்பெறும் இவ்வாறான பழிவாங்கல் அரசியல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக உரிய ஜனநாயக வழிகளில் குரல் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
