அநுராதபுர மஹிந்த கூட்டத்தில் பங்கேற்பேன்: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சுனா!

செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்களில் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறுவது குறித்து பல பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அது, மகிந்த ராஜபக்ச அல்ல, நாளை ரணில் விக்ரமசிங்க அழைத்து அவருடயை மேடையில் ஏறச் சொன்னாலும் அந்த மேடைக்குச் செல்வேன்.

எமது அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச, அவர் அழைத்தாலும் அவருடைய மேடைக்கும் நான் செல்வேன். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதிக்கும் எனது ஆதரவு இருக்கும். அதேபோலத்தான் நாமல் ராஜபக்சவும்.

நாமல் ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் மீதான தனிப்பட்டக் குற்றங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அது எனக்குத் தொடர்பற்றது.

எதிர்க்கட்சி உறுப்பினராக அவரை நான் ஆதரிக்கின்றேன். நாமல் ராஜபக்ச அல்ல, எனது மக்களுக்காக யாருடைய மேடையிலும் ஏறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!