விமான நிலையத்திலேயே அழைப்பாணை தரப்பட்டது: ஷிரந்தி ராஜபக்ஷவின் சிங்கப்பூர் பயண பின்னணி!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் விவரித்தார்.

முன்னதாக FCID யினால் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!