மட்டக்குளியில் 7 வாகனங்களை மோதித் தள்ளிய கார்: சாரதி போதையில் இருந்தமை அம்பலம்!

மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!