போலி கடவுச்சீட்டு விவகாரம்: குடிவரவுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் சி.ஐ.டி.யால் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கம்பஹாவைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!