சிவராசா அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி வெளிவிவகார அமைச்சருடன் கஜேந்திரகுமார் பேச்சு

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் அவர்களின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களுடன் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் அவர்கள் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. . அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்து அல்லது குறைப்பதற்கும், சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!