ரூ. 12.5 கோடி சொத்துக்கள், வாகனங்கள் முடக்கம்: போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கியது அம்பலம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, விசாரணைகள் தொடரும் நிலையில் குறித்த சொத்துக்களை 14 நாட்களுக்கு விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.

வத்தளையைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி பல சொத்துக்களையும் வாகனமொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரூ.9 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடையதாக மதிப்பிடப்பட்டுள்ள குறித்த சொத்துக்கள் செப்டெம்பர் 17, 2026 முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.

ஹுனுப்பிட்டிய பகுதியில் 7 பேர்ச்சஸ் காணியும் இரண்டு மாடி வீடும் – ரூ.4 கோடி, ஹுனுப்பிட்டிய, சட்டல பகுதியில் 17 பேர்ச்சஸ் காணியும் இரண்டு வீடுகளும் – ரூ.3 கோடி, ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியில் 5 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.50 இலட்சம், ஹுனுப்பிட்டிய, காந்தி மாவத்தையில் 3 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.70 இலட்சம், விசேட வகை கார் – ரூ.80 இலட்சம் என்பவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசாரணையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி ரூ.3.5 கோடி பெறுமதியான டொயோட்டா ரக ஜீப் வாகனமொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வாகனத்தை 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனத்தை விற்பனை செய்யவோ, உரிமையை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது. இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!