வவுனியாவில் வீடொன்றில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: பொலிஸார் சந்தேகம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சடலங்கள் இன்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் (வயது 60) என்ற பெண்ணும் அவரது மகனான அயந்தன் (வயது 35) என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் அவரது சிறிய தாயை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!