யாழ்ப்பாணம் செம்மணி ஏ9 வீதியில் சிற்றூந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சிற்றூந்தும் நேருக்கு நேர் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிற்றூந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
